Thursday, March 17, 2011

Upadesam to Arjuna by Vyasa Muni PART- ONE

ஸ்ரீ கிருஷ்ணர் லோகத்தில் தனது பணி முடிவடைததும்  வைகுண்டம் சென்றார். அப்பொழுது  ஸ்ரீ அர்ஜுனன் மிகவும் கவலையுடன் வியாசரை அணுகினார்." ஸ்ரீ கிருஷ்ணர்  வைகுண்டம் சென்று விட்டாரே , இனி பூமியின்  கதி என்ன"  என்று கேட்டார்.அவர் சதுர் யுக தருமங்களைப்பற்றி கூறி  கலியுகதைப்பற்றி கூறினார்.   "கிருத யுகத்தில் தானமும் தபசும் ,த்ரேதா யுகத்தில் ஞானமும் த்வாபர  யுகத்தில் யாகமும் மோட்சத்தை  கொடுத்தது . கலியுகத்தில்  தானமே மோட்சத்தை கொடுக்கும் சாதனமாகும். கிருத யுகத்தில் பிரம்மாவும் ,த்ரேதா யுகத்தில் சூரியனும் த்வாபர யுகத்தில் விஷ்ணுவும் பூஜிக்கப்பட்டனர். கலி யுகத்தில்  பரமசிவனே  பூஜிக்கத்தகுந்த தேவனாவார். கலியில் மத  ஆசாரங்களை  எவரும் பின்பற்ற  மாட்டார்கள். நோய்  அதிகமாகும். வேதத்தை மறந்து விடுவார்கள்.யாகம்  செய்ய மாட்டார்கள். தானம் செய்ய மாட்டார்கள். மழை இருக்காது. பொய்யும்  திருட்டும்  அதிகமாகும். பெண்களின் கற்பு குறைந்து  விடும். சாபட்டுக்கடைகள்  பெருகியிருக்கும்.காஷாயம்  தரித்தவர்கள் உலகை ஏமாற்றுவார்கள் .உத்தமமான வர்ணத்தினர் தாழ்தவர்களுக்கு பணிவிடை செய்வார்கள்.பக்தியில்லாத  பாட்டுக்கள் அதிகரிக்கும்.  கர்மாக்களை தூஷித்து போலி வேதாந்தம் பேசுபவர்கள்  அதிகமாக இருப்பார்கள். 

    இந்த தோஷங்களையெல்லாம்  தகர்க்க கலிகாலத்தில்  வழி உண்டு  என்றால் அது கலியுக தேவதையான பரமசிவனை  சரணடைதலே ஆகும்.சிவா பக்தி செய்பவன்  மோட்சத்தை அடைவான். முக்தி பெறுவான்  "  என்று கூறிய வியாச முனிவர்  அர்ஜுனனை வழி அனுப்பிவிட்டு  காசி ஷேத்ரம் நோக்கி பயனிக்கலானர்.    தொடரும் .........

Wednesday, March 16, 2011

who am I part two.

 

காலம் யாருக்காகவும்  காத்திருப்பதில்லை. எல்லோரும் காலத்துக்காக  காத்திருக்கிறார்கள்.  ஆகையால் காலத்தை நல்ல முறையில் செலவழிக்க வேண்டும். நம்முடைய  சரீரத்தில் இருக்கும் ஆத்மாவை ஜீவன் என்று  சொல்கிறோம். இந்திரியங்களைவிட மனம் சிறந்தது. மனதைவிட  அகங்காரம் சிறந்தது. அகங்காரதைவிட  மகத்துவம் சிறந்தது. மனதைவிட அவ்யகதம் மேலானது. அதைவிட புருஷன் மேலானது. புருஷனைவிட பகவானே மேலானவர். ஜகத்ரட்சகனான  பகவானை விட  அக்னி வடிவான  சிவனே எல்லாவற்றையும்விட  மகத்துவம் வாய்ந்தவன். அந்த சிவனை ஆராதனை செய்ய செய்ய  மாயை  அகலும். மாயை அகன்றால்தான்  மோட்சம் கிட்டும்.

Friday, March 11, 2011

who am I?

கொஞ்சம்  கூர்ம புராணத்தை பார்ப்போமா?  "ஆத்மா என்பதுதான் கடவுள்.அந்த நித்தியானந்த ஸ்வரூபி எங்கும் எப்பொழுதும் நிறைந்து உள்ளான்.அந்தர்யாமியாக விளங்கும் அவனை அறியாதவர்  உடலை  "நான்" என்று கூறுவர்.இரவும் பகலும் போலவும் நிழலும் வெயிலும் போலவும் ஆத்மாவும் உலகும் வெவ்வேறானது.ஆத்மாவிற்கு மாறுதல் இல்லை. அழிவும் இல்லை. உலகம் மாறிக்கொண்டே இருக்கும். அழிந்து  விடும். நமது ஹ்ருதய கமலத்தில் சுடர் போல் விளங்கும் ஆத்மாவை அக்ஞானம் மறைத்து நிற்கிறது.அதை தவிர்த்தால் ஆத்மாவை தரிசனம் செய்யலாம். மனதை ஒரு நிலைப்படுத்தினால் விரைவில் மாயையை வெல்லலாம். ஆத்மஸ்வரூபத்தை
அறிவதே ஞானம். ஆத்மாவானது  கர்மவசத்தால் உடலைபபெற்று மனதோடு கூடியிருப்பதால் அதை ஜீவன் என்பார்கள்."  தொடரும்........